தமிழகம்

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவிக்கு இப்படியொரு நிலைமையா? வெளியான பரபரப்பு தகவல்!!

Summary:

nirmaladevi got treatment in mentally affected hospital

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நிர்மலா தேவி என்ற உதவி பேராசிரியை தனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளை தவறான பாதையில் செல்ல வழி நடத்த முயன்றதாக வழக்குப் பதிவு செய்து கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். 

இதனை தொடர்ந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த நிர்மலா தேவியை சந்திக்க அவரது குடும்ப உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8-ந்தேதி வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு வந்தபோது அவர் சிவப்பு நிற சுடிதார் பேண்ட் அணிந்து அதன்மேல் புடவை கட்டி, தலை நிறைய மல்லிகை பூ, கழுத்து நிறைய நகைகளுடன் வித்தியாசமாக வருகை தந்திருந்தார்.

nirmala devi weird க்கான பட முடிவு

பின்னர் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த நிர்மலாதேவி நீதிமன்ற வாசற்படியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து கண்களை மூடி  தனக்குத் தானே எதையோ முணுமுணுத்துகொண்டிருந்தார். பின்னர் சாமி வந்தது போல வித்தியாசமாக நடந்துகொண்டுள்ளார். பின்னர் தர்கா, பஸ்நிலையம் போன்ற இடங்களில் அமர்ந்து அழுதுள்ளார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்மலாதேவி நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Advertisement