பச்சைக்கொடி காண்பிக்காத பெற்றோர்.. காதலன் எடுத்த முடிவால் பறிபோன 2 உயிர்கள்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!



Nilgiris Tragedy: Young Couple Dies by Suicide After Parents Oppose Their Love

காதலன் இறந்துபோன செய்தி அறிந்த காதலியும் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

அழைப்பை எடுக்கவில்லை:

Ooty News: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, காந்தல் பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் (வயது 26). இவர் நெல்லியாளம் நகராட்சியில், இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, இவரின் உறவினர்கள் பிரசாத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: என் மேல சந்தேகமா? தலைநசுங்கி உயிரிழந்த கணவன்.. மனைவி செய்த வெறித்தன சம்பவம்!

தூக்கிட்டு தற்கொலை:

அப்போது, அவர் அழைப்பை ஏற்காத காரணத்தால், நகராட்சி அலுவலகத்தை தொடர்புகொண்டு பேசி இருக்கின்றனர்.  அப்போது, அவர் ஒரு வாரமாக பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அவர் தங்கியிருந்த அறைக்கு நேரில் சென்று பார்த்தபோது, அவர் பேன் கம்பியில் தூக்கிட்டு சடலமாக மீட்கப்பட்டார். 

Crime news

காதல் விவகாரம்:

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரசாந்தின் தற்கொலை தொடர்பான விசாரணையில், காதல் விவகாரத்தில் தற்கொலை நடந்தது தெரியவந்தது. அதாவது, பிரசாந்த் காந்தல் பகுதியில் வசித்து வரும் 20 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலியும் மரணம்:

இந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டி பெற்றோரிடம் கூறி இருக்கிறார். அவர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில், மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனிடையே, பிரசாந்தின் மரணம் தொடர்பான செய்தி அறிந்த 20 வயது இளம்பெண்ணும், கை நரம்புகளை அறுத்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதையும் படிங்க: "தப்பு பண்ணிட்டோம் தூக்குல தொங்கிடலாம்".. கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை.. இறுதியில் பறிபோன உயிர்.!