தொட்டியில் பிணமாக மிதந்த புதுமாப்பிள்ளை.. 3 நாட்களாக கேரட் கழுவும் தொட்டியில் சடலம்.!

தொட்டியில் பிணமாக மிதந்த புதுமாப்பிள்ளை.. 3 நாட்களாக கேரட் கழுவும் தொட்டியில் சடலம்.!


Nilgiris Ooty New Married North Indian Youngster Died Mystery

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கேத்தியில் கேரட் கழுவும் இயந்திரங்கள் அதிகளவு உள்ளன. தினமும் அறுவடை செய்யப்படும் கேரட்களை சுத்தம் செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் மிஸ்ரா (வயது 34) என்ற தொழிலாளி, கடந்த 5 ஆண்டுகளாக கேரட் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக அவர் மாயமாகவே, நண்பர்கள் தேடிப்பார்த்தும் கண்டறிய இயலவில்லை. இதனால் அவர் யாரிடமும் சொல்லாமல் ஊருக்கு என்றிருக்கலாம் என்று நினைத்துள்ளனர். 

Bihar

நேற்று அங்குள்ள கேரட் கழுவும் தொட்டியில் ரஞ்சன் மிஸ்ரா பிணமாக மிதக்கவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ரஞ்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரஞ்சன் மிஸ்ராவுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. அவரின் மனைவி பீகாரில் உள்ள நிலையில், ரஞ்சன் ஊட்டியில் தங்கியிருந்து வேலைபார்த்து வந்துள்ளார் என்ற சோக தகவலும் தெரியவந்தது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.