90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
கோத்தகிரி கூலித்தொழிலாளி மர்ம மரணம் விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; போதையில் மனைவியிடம் உண்மையை உளறிய நபர்..!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, கொடநாடு சாலையில் இருக்கும் ஈளாடா பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். ஈளாடா பகுதியில் தாயாருடன் வசித்து வருகிறார். சிவகுமாரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் அன்னூரில் வசித்து வருகிறார்கள்.
தனது தாயாருடன் கூலி வேலை செய்து பிழைத்து வந்த சிவகுமார், கடந்த செப். 18ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வருவதாக புறப்பட்டு சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
மகனை காணாது தேடி அலைந்த தாய், சிவகுமாரின் மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, சிவகுமாரின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பல பரபரப்பு தகவலும் அம்பலமாயின. அதாவது, ஈளாடா பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர், தனது மனைவியை பிரிந்து விஷ்ணுவின் வீட்டருகே தனியே வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று காரைக்குடியில் இருக்கும் மனைவியின் வீட்டிற்கு சென்ற விஷ்ணு, போதையில் கோத்தகிரியில் சிவகுமாரை கொலை செய்து வந்ததைப்போல, உன்னையும் கொன்றுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்.
இதன்பின் கணவரிடம் மனைவி விசாரித்தபோது உண்மை தெரியவரவே, அவர் உடனடியாக சிவகுமாரின் மகளுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, விஷ்ணுவின் வாக்குமூலப்படி சிவகுமாரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காவல் துறையினர் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் விஷ்ணு தலைமறைவாகி இருக்கிறார். அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.