மயங்கி விழுந்த 16 வயது மாணவி.. டாக்டர் சொன்ன ஷாக் தகவல்.. போக்ஸோவில் சிக்கிய காதலன்.!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவர்கள்:
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் வசித்து வரும் 17 வயதுடைய மாணவர், ஊட்டியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் பயின்று வருகிறார். இதே கல்லூரியில், அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியும் பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: வாயில் டேப் ஒட்டி வன்கொடுமை.. 5 மாத கர்ப்பத்தால் அம்பலமான அதிர்ச்சி உண்மை.! மாணவிக்கு நேர்ந்த அவலம்.!
நட்பு-காதல்:
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியதாக தெரியவருகிறது. இதனிடையே, சமீபத்தில் கல்லூரி மாணவி தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அங்கு திடீரென மயங்கினார்.

மருத்துவமனையில் அனுமதி:
இதனால் பதறிப்போன உறவினர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே, பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணை:
பின் இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கல்லூரி காதலும், காதலனுடன் தனிமையில் இருந்ததால் கர்ப்பமானதும் தெரியவந்தது. இதனையடுத்து, கல்லூரி மாணவரின் மீது போக்ஸோவில் வழக்குப்பதிந்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 3ம் வகுப்பில் பலாத்காரம்.. 8ம் வகுப்பில் கட்டிக்கொடுத்த மாணவி.. 'குட் டச் பேட் டச்' அம்பலப்படுத்திய அதிர்ச்சி உண்மை.!