சற்று முன்... தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஷ்! வெளியான திடீர் அறிவிப்பு...!!!
வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனால் வங்கிச் சேவைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பள வரவு தாமதமாகாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளன.
செப்டம்பர் 28 முதல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
வாரத்திற்கு 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்து மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் போராட்டத்தால் வங்கிகளின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு தவெக அரசு வைத்த செக்..! 5 வருஷம் முடுஞ்சுடுச்சா? அலறும் ஊழியர்கள்... அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி கண்டிஷன்..!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்
மாத இறுதியில் வங்கி சேவைகளில் ஏற்படக்கூடிய சிரமங்களை கருத்தில் கொண்டு, மத்திய நிதியமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வழக்கமான தேதிக்கு முன்பாகவே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் தொடர்பான தாமதம் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் முன்கூட்டியே ஊதியம்
வங்கி வேலைநிறுத்தத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இம்மாத ஊதியம் செப்டம்பர் 25-ஆம் தேதியே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாத இறுதி செலவுகளுக்கான பணத் தேவையை சிரமமின்றி சமாளிக்க முடியும்.
மூன்று நாட்கள் நடைபெற உள்ள வங்கி வேலைநிறுத்தத்தால் சம்பளப் பரிவர்த்தனைகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்கூட்டியே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மத்திய மற்றும் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதிய வரவு வழக்கம்போல் தடையின்றி நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: பழகின உறவினரே செய்த துரோகம்! விளையாட சென்ற 8 வயது சிறுமியை... கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று அத்து மீறல்..! பகீர் சம்பவம்...!!!