வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
சென்னையில் படிப்படியாக உயர்ந்த குணமடைந்தோர் எண்ணிக்கை..! ராயப்புரத்தில் மட்டும் எவ்வளவு பேர் தெரியுமா?
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நோய் பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனாவானது ஆரம்பத்தில் தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் 235 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கொரோனாவிலிருந்து 53 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் அதிகம் பாதித்த பகுதியான ராயப்புரத்தில் மட்டும் 12 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.