தமிழகம்

பொதுமக்களுக்காக புதிய வசதிகளுடன் 555 புதிய பேருந்துகள்!. முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!.

Summary:

new fecility in government bus


தமிழகத்தில் 140 கோடி ரூபாய் மதிப்பில், 555 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில், தமிழக அரசு சார்பில் புதிதாக 3000 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பை அடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 515 பேருந்துகளும், அக்டோபர் மாதம் 471 பேருந்துகளும் மக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இன்று 555 பேருந்துகளின்  சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொடங்கி வைத்துள்ளார்.

                     

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். மேலும் இந்த புதிய பேருந்துகளில் அகலப்படுத்தப்பட்ட படிக்கட்டுகள், மியூசிக் சிஸ்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு இடவசதி போன்ற புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


Advertisement