ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்!! தமிழகத்தில் டீ கடைகளுக்கு அனுமதி!! தமிழக அரசு உத்தரவு..

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்!! தமிழகத்தில் டீ கடைகளுக்கு அனுமதி!! தமிழக அரசு உத்தரவு..


New corona lockdown rules tea shop open from june 14

தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த பல வாரங்களாக தொடர் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதன் பயனாக தமிழகத்தில் தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியுள்ளது

இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவருவதால் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுவருகிறது. நாளை முதல் வரும் ஜூன் 21 ஆம் தேதிவரை அமல்படுப்பட்டுள்ள ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் தொடங்கி பல்வேறு நடைமுறைகளுக்கு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது/

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தேநீர்கடைகள் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது. தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.