பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த விவகாரம்.! 6 பேரை அதிரடியாக காட்டிய போலிஸ்.!

பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த விவகாரம்.! 6 பேரை அதிரடியாக காட்டிய போலிஸ்.!


nellai-police-arrested-6-people-for-urinating

திருநெல்வேலியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சில இளைஞர்கள் மீது, சிறுநீர் கழித்து கொடூரமான முறையில் அவர்கள் மீது, சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து, 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். திருநெல்வேலி மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் வசித்து  வரும் மாரியப்பன் மற்றும் மனோஜ் குமார் உள்ளிட்ட இருவரும் சென்ற அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி, தாமிரபரணி ஆற்றில் நீராடுவதற்காக சென்றுள்ளனர். 

nellai

அங்கு நீராடிவிட்டு, இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களின் ஜாதியை கேட்டு தகராறு செய்துள்ளது. அவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரிந்தவுடன், அவர்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் மீது, சிறுநீர் கழித்ததாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் அவர்கள் வைத்திருந்த கைபேசிகளையும் அந்த கும்பல் பறித்து சென்றுள்ளது.

nellai

இதனால் காயமடைந்த அந்த இரு இளைஞர்களும், நெல்லையில் இருக்கின்ற மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்கள். இத்தகைய நிலையில், அந்த இளைஞர்களின் உறவினர்கள் இந்த சம்பவம் குறித்து, தஞ்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையின் முடிவில், இந்த புகார் குறித்து, லட்சுமணன், சிவா, ராமர், நல்லமுத்து, ஆயிரம், பொன்னுமணி ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.