விழுப்புரம் அருகே பயங்கரம் ... பூஜை அறையில் புதைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் சடலம்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

விழுப்புரம் அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்து விட்டு பின்னர் பூஜை அறையில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மாரங்கியூரை சேர்ந்தவர் வயதான மூதாட்டி இந்திராணி. இவர் கடந்த மாதம் சிவசங்கர் என்பவரால் கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து சிவசங்கரை கைது செய்த போலிசார் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவரது தாயார் குப்புவையும் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் சிவசங்கர் மூதாட்டி இந்திராணியிடம் 6 ஆண்டுகளுக்கு முன்பு கடன் பெற்றுள்ளார். இந்தக் கடனை திருப்பிக் கொடுப்பதாக கூறி மூதாட்டியை வீட்டிற்கு அழைத்து வந்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு மூதாட்டியை அடித்துக்கொண்று பூஜை அறையில் புதைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.