வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகள் பலாத்காரம் விவகாரம்; தேசிய பெண்கள் ஆணையம் உத்தரவு.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவர் முன்னாள் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் ஆவார். காவேரிப்பட்டினம், கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் என்.சி.சி பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
இதனிடையே, தனியார் பள்ளியில் படித்து வந்த 13 வயது சிறுமியின் பெற்றோர், தங்களின் மகள் சிவராமனால் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் மொத்தமாக 12 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் பலாத்காரத்தால் அவதிப்பட்டது தெரியவந்தது.
11 பேர் கைது, விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
இந்த விஷயம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியை என பலர் 11 பேர் கைது செய்யப்பட்டனர். சிவராமன், கோமதி, சாம்சன், சதீஷ்குமார் உட்பட 11 பேர் கைதான நிலையில், இவர்களின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பூசாரி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.!
இதனிடையே, தேசிய மகளிர் ஆணையம் இவ்விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து இருக்கிறது. இந்த விஷயம் குறித்து விரைந்து விசாரணை நடத்தி, 3 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யவும் தமிழ்நாடு டிஜிபி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 16 வயது மகளுடன் வசித்துவந்த கைம்பெண் பலாத்காரம்; உடலெல்லாம் கடித்து கொடூரம்.. கயவனுக்கு மாவுக்கட்டு.!