பசியால் தவித்த குழந்தைகள்! பசியை போக்க தாய் எடுத்த அதிரடி முடிவு! வெளியான நெஞ்சை உருக்கும் சம்பவம்!

பசியால் தவித்த குழந்தைகள்! பசியை போக்க தாய் எடுத்த அதிரடி முடிவு! வெளியான நெஞ்சை உருக்கும் சம்பவம்!


mother-sale-hair-for-children-food

சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி பிரேமா. அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். செல்வம் வீரமனூர் செங்கல் சூளையில் வேலை பார்த்துவந்தார்.  

அப்பொழுது சூளை முதலாளியிடம் அவர் கடன் வாங்கி இருந்துள்ளார். அதனை அடைக்க அவர் சுற்றிலும் பலரிடமும் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் சுமை அதிகரித்த நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டு செல்வம் கடந்த 7 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். 

hairஅதனைத்தொடர்ந்து பிரேமா மூன்று பிள்ளைகளையும்  வைத்துக்கொண்டு தனியாக மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் கடன்காரர்களும் அவரை தொல்லைப்படுத்தி வந்த நிலையில், அவர் தற்கொலைக்கும்  முயற்சி செய்துள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில் கையில் பணம் இல்லாமல்,  குழந்தைகளின் பசியை போக்க வழிதெரியாமல் தவித்து வந்த பிரேமா தன் தலைமுடியை விற்று அதில் கிடைத்த 150 ரூபாய் பணத்தை வைத்து குழந்தைகளின் பசியை போக்கியுள்ளார்.இது குறித்து  தகவலறிந்த சமூக ஆர்வலர்  ஒருவர் இதனை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில்,   
சேலம் மாவட்ட நிர்வாகமும், ஆவின் நிர்வாகமும் பிரேமாவிற்கு உதவ முன்வந்துள்ளனர்.