இந்தியா

மகனை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு கோர்ட்டுக்கு வந்த தாய்! திடீரென காத்திருந்த பேரதிர்ச்சி! கண்ணீர் சம்பவம்!!

Summary:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரிஜிபள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரிஜிபள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அருணா. இந்த தம்பதியினருக்கு 10 வயதில் ஹர்ஷவர்தன் என்ற மகன் இருந்தார். அவர் அங்குள்ள ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுவன் நான்கு வருடங்களுக்கு முன் வீட்டின் மேல்மாடியில் விளையாடி கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றநிலையில் உடல்நிலை சரியாகியுள்ளது.

இந்த நிலையில் திடீரென அந்த சிறுவனுக்கு கண், வாய், மூக்கு, ஆசனவாய் இவற்றின் வழியாக ரத்தம் வெளியேறியுள்ளது. மேலும் இதற்கு பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தபோதும் அது சரியாகவில்லை.இந்நிலையில் சிறுவனின் தந்தை மணி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் எங்கேயோ சென்றுவிட்டார். இதற்கிடையில் குழந்தையை வைத்துக்கொண்டு அருணா பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார். 

இந்நிலையில் மகன் படும் கஷ்டத்தை தாங்க முடியாமல், அவனை  கருணை கொலை செய்ய அனுமதி வேண்டி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தற்போது லாக்டவுனால் நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், மகனை ஆட்டோ ஒன்றில் வீட்டுக்கு திருப்பி அழைத்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக வழியிலேயே சிறுவன் ஹர்ஷவர்தன் பரிதாபமாக உயிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த தனது மகனைக் கண்டு அருணா கதறித் துடித்துள்ளார். இச்சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.


Advertisement