தீராத வயிற்று வலியால் துடித்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... கதறும் குழந்தைகள்...

தீராத வயிற்று வலியால் துடித்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... கதறும் குழந்தைகள்...


Mother of 3 girls commits suicide in erode

நம்பியூர் அருகே உள்ள கோட்டு புள்ளம்பாளையம், காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார் - கிருஷ்ணா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். சதிஷ் குமார் ராஜஸ்தான் மாநிலம் நாடோடி காரளியை சொந்த ஊராக கொண்டவர்.

இந்நிலையில் சதிஷ் குமார் வறுமையின் காரணமாக குடும்பத்துடன் வந்து புள்ளம்பாளையம் பகுதியில் தங்கி அங்கு கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். சதிஷ் குமாரின் மனைவி கிருஷ்ணா தீராத வயிற்று வலியால் துடித்து வந்துள்ளார். அதற்காக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

erode

ஆனால் வயிற்று வலி சரியாகததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று கணவர் மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலைக்கு சென்று வீடு திரும்பிய சதிஷ் குமார் கிருஷ்ணா தூக்கிட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணாவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். அதனை தொடர்ந்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.