அரசியல் தமிழகம்

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா! தி.மு.க. எம்.எல்.ஏ.வை தாக்கி வீட்டிற்குள் பூட்டிவைத்த பொதுமக்கள்! லட்சக்கணக்கில் கொட்டிக்கிடந்த பணம்!

Summary:

money for vote


தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு இந்தமாதம் 21 ஆம் தேதி அன்று அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் பல கட்சி தலைவர்களும், தொண்டர்களும்  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே அம்பலம் பகுதியில் மாரியப்பன் என்பவரின் வீட்டில் பெரியகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான சரவணக்குமார், நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து  தனது ஆதரவாளர்களுடன் அவரது வீட்டிலே தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பெரியகுளம் தி.மு.க எம்.எல்.ஏ சரவணகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஐந்து பேர், பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக கூறி அங்கிருந்த பொதுமக்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட 4 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த ஐந்து பேரையும் அந்த வீட்டின் உள்ளேயே வைத்து கதவை பூட்டியுள்ளனர்.

இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பொதுமக்கள் பூட்டிவைத்திருந்த கதவை திறந்து பார்த்தபோது ஆயிரத்திற்கு மேலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தது.

 அதன் மதிப்பு 2 இலட்சத்து 78 ஆயிரம் ருபாய் என கூறப்படுகிறது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


 


Advertisement