இன்று மோடி செய்த ஒற்றை செயல்! ஒட்டுமொத்த நாடுகளும் தமிழகத்தை திரும்பி பார்த்தது!

இன்று மோடி செய்த ஒற்றை செயல்! ஒட்டுமொத்த நாடுகளும் தமிழகத்தை திரும்பி பார்த்தது!



Modi wearing vesti in tamilnadu

இன்று பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கின்ற நிலையில், பலத்த பாதுகாப்பும், பிரமாண்ட நிகழ்ச்சி ஏற்படும், தடல்புடலான வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் சாலை வழியாக கார் மூலம் மாமல்லபுரம் வந்தடைந்தார்.

இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங் அவர்களை வரவேற்க வருகை தந்த பிரதமர் மோடி, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் கெத்தாக நெஞ்சை நிமிர்த்தி வந்திருந்தார். அங்கு  அர்ஜுனன் தபசு உள்ளிட்ட மாமல்லபுரத்தின் சிற்பத் தொகுதிகளை சீன அதிபருக்கு விவரித்து விளக்கி வருகிறார் பாரத பிரதமர் மோடி.

modi

இந்தநிலையில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வந்த புகைப்படத்தை பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தமிழர்கள் பலரும்  பகிர்ந்துவருகின்றனர். சமீபத்தில் ஐநா வில் "யாரும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை படி தமிழுக்கு பெருமை சேர்த்தார். இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று அணிந்த உடை, ஒட்டுமொத்த நாடுகளையும் தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி சட்டைதான் என திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.