செல்போன் கடைக்கு ரீசார்ஜ் செய்ய வந்த பெண்ணை மயக்கி, செல்போன் கடைக்காரர் செய்த செயல்!.

செல்போன் கடைக்கு ரீசார்ஜ் செய்ய வந்த பெண்ணை மயக்கி, செல்போன் கடைக்காரர் செய்த செயல்!.



mobile shop owner killed his customer

கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த குலசேகரம் சிற்றாறு பட்டணங்கால்வாயில் கடந்த 20-ஆம் தேதி 40 வயது மதிக்கதக்க பெண்ணின் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த பெண் குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே சேக்கல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கூலித்தொழிலாளியின் மனைவி லில்லிபாய் என்பது தெரியவந்தது.

அதன் பின் மருத்துவ அறிக்கையில், லில்லிபாய் விஷம் கலந்த குளிர்பானத்தை அருந்தியதால் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனால் இது கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். இதனால் லில்லிபாயுடன் கடைசியாக யார் பேசினார் என்று சோதனை செய்து   பக்கத்து வீட்டுக்காரரான, ஸ்டூடியோ மற்றும் செல்போன் கடை நடத்தி வரும் ராஜேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், லில்லிபாய்க்கும்,  ராஜேஷ்குமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், அவர் லில்லிபாயை காரில் கடத்தி சென்று குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்று பிணத்தை கால்வாயில் வீசியதும் தெரியவந்தது.

cell phone shop

ராஜேஷ் போலீசாரிடம் கூறுகையில், லில்லிபாய் தனது கடைக்கு ரீஜார்ஜ் செய்ய வந்த போது ரீசார்ஜ் நோட்டில் அவர் எழுதி வைத்த நம்பர் மூலம், அவரிடம் நட்பாக பழகினேன்.

என்னுடைய பேச்சில் மயங்கிய அவர் சிம்கார்டுக்கு ரீசார்ஜ் செய்ய அடிக்கடி எனது கடைக்கு வளந்துசெல்வார். இதை தான் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவருடன் பல ஊர்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தேன்.

மேலும் தான் வியாபாரத்தை விரிவாக்குவதாக கூறி லில்லிபாயிடம் இருந்து தங்க நகைகளையும், பணத்தையும் கடனாக வாங்கினேன்.ஒரு கட்டத்தில் தன்னுடைய நகைகளை திருப்பி தருமாறு அவர் கேட்டார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் அவரை சமாதானப்படுத்துவது போல நடித்து காரில் ஏற்றி கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றேன்.

அங்கு இருவரும் ஒரே அறையில் தங்கினோம். அதன் பின் நள்ளிரவில் லில்லிபாய்க்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தேன். பின்னர் அவரது உடலை ஒரு கால்வாய் பகுதியில் வீசிவிட்டு சென்று விட்டதாகவும், லில்லிபாய்க்கு நடந்த இறுதிச்சடங்கிலும் கலந்துகொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.