அரசியல் தமிழகம்

அமைச்சர் பொறுப்பு வேண்டாம், நான் உங்களில் ஒருவன் - மனம்திறந்த உதயநிதி ஸ்டாலின்.!

Summary:

அமைச்சர் பொறுப்பு வேண்டாம், நான் உங்களில் ஒருவன் - மனம்திறந்த உதயநிதி ஸ்டாலின்.!

அமைச்சர் பதவி உட்பட எந்த ஒரு பொறுப்பும் எனக்கு வேண்டாம். நான் தொண்டர்களில் ஒருவராக இருக்க ஆசைப்படுகிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான தமிழக அரசு ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்போவதாக தொடர் வதந்திகள் அவ்வப்போது பரவி வந்தது. சில நேரங்கள் இவை விவாதம் வரை சென்றது.

இந்நிலையில், அமைச்சர் பதவி சர்ச்சை குறித்து திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கையில், "அமைச்சர் பதவி எனக்கு வேண்டாம். அமைச்சர் பதவி உட்பட எந்த ஒரு பொறுப்பும் எனக்கு வேண்டாம். 

நான் தொண்டர்களில் ஒருவராக இருக்க ஆசைப்படுகிறேன். திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அனைத்து சூழலிலும் துணையாக இருக்கவே எனக்கு விருப்பம்" என்று தெரிவித்தார். 


Advertisement