அரசியல் தமிழகம்

வெற்றி சான்றிதழை பெற்றார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.! படு குஷியில் திமுக தொண்டர்கள்.!

Summary:

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின்படி ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்த நிலையில், திமுக 158 இடங்களில் முன்னிலையிலும், அதிமுக 76 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. 

இந்தநிலையில், திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், திமுக முதலமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில், 70230 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.  இந்தநிலையில் கொளத்தூர் தொகுதியில் அமோக வெற்றி பெற்ற திமுக முதலமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் வெற்றி சான்றிதழை பெற்றார்.


Advertisement