அரசியல் தமிழகம்

அசத்தலான கோரிக்கைகளுடன் வாழ்த்திய ஆஸ்கர் மன்னன்! மு.க ஸ்டாலின் கொடுத்த வேற லெவல் பதிலை பார்த்தீர்களா!!

Summary:

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்தநிலையில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் வெற்றி பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர் ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில், சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த பதிவிற்கு பதிலளித்து திமுக தலைவர் ஸ்டாலின், இசைப்புயல் ஆஸ்கார் விருதாளரான தங்களின் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.  தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய அரசு செயல்படும் என்று பதிலளித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பலரும்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement