புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலையில் துரிதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு!



minister-vijayabaskar-visited-miratunilai-village-today

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட இளைஞரின் சொந்த ஊரான மிரட்டுநிலையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

புதுக்கோட்டையை பொறுத்தவரை மிரட்டுநிலை கிராமத்தில் 23 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று கடந்த 20-ந் தேதி உறுதியானது. இது மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பாகும். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

miratunilai

மிரட்டுநிலை கிராமத்தை சுற்றி 8 கி.மீ. அளவில் உள்ள 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதேபோல கிருமி நாசினி தெளிப்பு பணிகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீரும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிரட்டுநிலை கிராமத்தில் இன்று ஆய்வினை மேற்கொண்ட சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மிரட்டுநிலை கிராமத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மொபைல் ஏடிஎம், மளிகை மற்றும் காய்கறி கடைகள் மிகவும் பாதுகாப்புடன் திறக்கப்படுவதாகவும் மொத்த பஞ்சாயத்திலும் அணைத்து நடவடிக்கைகளும் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.