கொஞ்சி குழாவி காதலனுடன் போனில் பேசிய தாய்..! அம்மா அம்மான்னு கூப்பிட்ட 3 வயசு குழந்தை.... ஆத்திரத்தில் அடுத்த நொடி குழந்தையை செய்த கொடூரம்! அதிர்ச்சி சம்பவம்!!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குழந்தையின் தாய் ருச்சி குப்தாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, ருச்சி குப்தா நீண்ட நேரமாக தனது காதலனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்த 3 வயது குழந்தை தாயின் கவனத்தை ஈர்க்க முயன்றதாகவும், இதையடுத்து ஆத்திரமடைந்த அவர் குழந்தையை தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!
குழந்தை உயிரிழப்பு... தாய் கைது
தாக்குதலில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ருச்சி குப்தா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
தொடரும் போலீஸ் விசாரணை
இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, சம்பவத்திற்கு முன் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் காதலனின் தொடர்பு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 3 வயது குழந்தை உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு நொடி ஆத்திரத்தில் நொறுங்கிய குடும்பம்! தந்தையே எமனாக மாறிய அவலம்.....இறுதியில் நடந்த அதிர்ச்சி!!!