பகீர் சம்பவம்... தாய் மாமாக்கு தலையில் வெட்டு... சித்திக்கு போனில் தகவல்... நடந்தது என்ன.?
சென்னை மடிப்பாக்கத்தில் தாய் மாமாவை கொலை செய்து விட்டு மனநலம் பாதிக்கப்பட்ட மருமகன் தலைமறைவாக இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் சிறு கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கந்த பெருமாள். இவர் சென்னையில் வசிக்கும் தங்கை பார்வதி இறந்து விட்டதால் மனநலம் பாதிக்கப்பட்ட அவரது இரண்டாவது மகனை சென்று அடிக்கடி பார்த்து பராமரித்து வந்தார். அவருடனே மடிப்பாக்கத்தில் தங்கியிருந்தார்.
அர்ஜுன் திடீரென தனது சித்திக்கு போன் செய்து தாய் மாமா கந்தபெருமாள் இறந்து விட்டதாக கூறிவிட்டு போனை கட் செய்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அர்ஜுன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தலையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார் கந்தபெருமாள். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த கந்த பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி இருக்கும் அர்ஜுனை காவல்துறை தேடி வருகிறது.