கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
1,2 அல்ல 4 ஆண்டுகள்... சுடுகாட்டில் குழி தோண்டி வசித்து வரும் நபர்... என்ன காரணம் தெரியுமா...
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரன். இவர் கடந்த 4 ஆண்டுகளாக சுடுகாட்டில் 6 அடியில் குழி தோண்டி இரவு பகலாக அம்மனுக்கு பூஜை செய்து விரதம் இருந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரன் என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டையில் கேன்சர் நோய் இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவர்கள் கேன்சரை குணப்படுத்த முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்துள்ளார் சந்திரன்.
அந்த சமயத்தில் தான் சந்திரன் அம்மனை மனம் உருகி பிரார்த்தனை செய்ததை அடுத்து கேன்சர் நோய் குணமாகியுள்ளது. அதன்பின் அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடம் அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.
இதுகுறித்து சந்திரன் கூறுகையில் தனது நோய் குணமாகியதால், கடந்த 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடமணிந்து 21 நாட்கள் அன்ன ஆகாரம் உண்ணாமல் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்ய தோண்டப்படும் குழி போன்று குழி தோண்டி அந்த குழியில் தங்கி இரவு பகல் வசித்து வருகிறேன்.
அதனால் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாக நினைத்து சுடுகாடு வரை சென்று உயிருடன் திரும்புகிறேன். முத்தாரம்மனின் ஒரு அவதாரம் சுடுகாட்டு காளி என்றார்.