தமிழகம்

வேறொருவருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கள்ளக்காதலன்!. அதிர்ச்சியில் அவர் எடுத்த முடிவு!.

Summary:

வேறொருவருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கள்ளக்காதலன்!. அதிர்ச்சியில் அவர் எடுத்த முடிவு!.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுதா.  இவர் நாச்சியார்குப்பத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில், சத்துணவு அமைப்பாளராகப் பணி புரிந்து வந்தார்.  

 4 ஆண்டுகளுக்கு முன்பு சுதாவின் கணவர் பசுபதி இறந்த நிலையில் 7 வயது நிரம்பிய மகளுடன் வசித்துவந்துள்ளார் சுதா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற டெய்லருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக் காதலாக மாறியது. இருவரும், கடந்த 3 ஆண்டுகளாக, உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக, நள்ளிரவில், தன் காதலி வீட்டிற்குச் சென்றுள்ளார் சதீஷ். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடைய வைத்தது. சுதா இன்னொரு நபருடன், உல்லாசமாக இருந்துள்ளார். சதீஸ் வரும்பொழுது அந்த நபர் தப்பி ஓடி விட்டார். 

சுதாவிடம் வந்தது யார் என கேட்டுள்ளார் சதீஸ், அதற்கு சுதா மழுப்பலாக பதில் கூறியதால் வெறுப்படைந்த அவர் சுதாவை அழைத்துக்கொண்டு ஓடை பகுதிக்கு சென்று அடித்து தாக்கியுள்ளார். ஒருகட்டத்தில் அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு சுதாவின் உடலை மண்ணை தோண்டி புதைத்துவிட்டு அவர் வந்த வண்டியை  அருகில் உள்ள கிணற்றில் தூக்கிவீசி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை சதீஷ் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சுதாவை கொலை செய்துவிட்டேன் என கூறி சரணடைந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சதீசிடம் விசாரித்து வருகின்றனர்.


Advertisement