ஏற்கனவே இரண்டு காதலி..! இதில் ஒரு கள்ள காதல் வேறு.! ஆசை யாரை விட்டுச்சு.! உயிருக்கு போராடும் மேஷ்திரி.!



Man killed partner for illegal relationship

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை என்னும் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருக்கு நீலா, ரத்தினம், சவுமியா என 3 மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவி ரத்தினத்துடன் பெங்களூருவில் தங்கி மேஸ்திரி வேலை பார்த்து வந்துள்ளார் பழனி.

பழனியின் மற்றொரு மனைவி சவுமியா தனது குழந்தைகளுடன் சொந்த ஊரில் தங்கியுள்ளார். இந்நிலையில் வேலுச்சாமி(27) என்ற கட்டிட மேஸ்திரி ஒருவர் சவுமியாவின் ஊருக்கு வர, சவுமியாவுக்கும், வேலுச்சாமிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியுள்ளது.

ஒருநாள் சவுமியா வீட்டில் தனியாக இருந்தபோது வேலுச்சாமி சவுமியாவை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு சவுமியா மறுக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து சவுமியா தன் மீது ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதைப்பார்த்த வேலுச்சாமி அவர்மீது தீக்குச்சியை கொளுத்திப்போட, உடனே சவுமியா எரியும் தீயுடன் வேலுச்சாமியை கட்டிப்பிடித்து இருக்கிறார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரைம் மீட்டு மருத்துவமனையில் சேர்க்க, சவுமியா சிகிச்சை பழநின்று உயிர் இழந்துள்ளார்.

சவுமியா தன்னுடன் உறவில் இருக்கும்போதே வேறொரு வாலிபருடனும் தொடர்பில் இருந்ததாகவும், இதுபற்றி ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் அவரை எரித்தேன் எனவும் வேலுச்சாமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், சவுமியா தவிர வேலுச்சாமிக்கு வேறு இரண்டு காதலிகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.