தமிழகம்

இரத்த வெள்ளத்தில் மிதந்த மருமகள்.. மருமகள் என்றுகூட பார்க்காமல் மாமனார் செய்த காரியம்..

Summary:

இரத்த வெள்ளத்தில் மிதந்த மருமகள்.. மருமகள் என்றுகூட பார்க்காமல் மாமனார் செய்த காரியம்..

குடும்ப தகராறில் சொந்த மருமகளை மாமனாரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ள ஜங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவா (40). சிவா ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிவாவுக்கும் கந்திலி குமிடிக்கான்ப்பட்டி பகுதியைச் சார்ந்த முருகேசன் என்பவரின் மகள் முருகம்மாளை (36) என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் முடிந்து மதுனிஷா(11) என்ற மகளும், ரோகித் (8) என்ற மகனும் உள்ளனர்.

முருகம்மாள் கலர்பதி பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகம்மாள் தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, தனது பெற்றோர் வீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக வசித்துவந்துள்ளார்.

விவாகரத்து கேட்டு முருகம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முருகம்மாள் தனது மாமனார் வீட்டிற்கு சென்று, அவர்கள் தங்கியிருக்கும் வீடு தனக்கு சொந்தமானது எனவும், அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறுங்கள் என மாமனார் மணியிடம் கூறியதாக தெரிகிறது.

இதனால் மாமனார் - மருமகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, முருகம்மாள் வீட்டின் சமயலறையில் சமைத்துக்கொண்டிருந்தபோது, தான் மறைத்துவைத்திருந்த கத்தியுடன் சென்ற மணி, தனது மருமகளை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

முருகம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து கால் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனிடையே, தனது மருமகளை கொலை செய்துவிட்டதாக கூறி, மணி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மணியை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று முருகம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement