கொரோனா தனிமைப்படுத்தல்! வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் குறித்து வெளிவந்த அதிர்ச்சி செய்தி! கதறிதுடிக்கும் மனைவி!

கொரோனா தனிமைப்படுத்தல்! வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் குறித்து வெளிவந்த அதிர்ச்சி செய்தி! கதறிதுடிக்கும் மனைவி!


man-dead-while-quarantine-after-coming-from-abroad

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்  சுந்தரவேல். 35 வயது நிறைந்த அவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு, கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில்,  சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் அதனைத் தொடர்ந்து அவர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை. மேலும் அவர் குறித்து எந்த தகவலும் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இதனால் சந்தேகமடைந்து பதறிப்போன அவரது மனைவி சந்திரா, பல முயற்சிகளுக்குப் பின் கடந்த 29ம் தேதி குறிப்பிட்ட அந்த ஓட்டலை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் வெளியே சென்றுள்ளார் என பொறுப்பில்லாமல் பதில் கூறியதாகக் கூறப்படுகிறது. பிறகு தொடர்ந்து அவர் போன் செய்த நிலையில் அவரது கணவர் சுந்தரவேல் கழிவறையில் மர்மமான முறையில் இறந்ததாக கூறியுள்ளனர். மேலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை, பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரா, கொரோனா சோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களை அரசாங்கம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த ஹோட்டல்தான் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். இப்படி அநியாயமாக என் கணவரை கொன்னுட்டாங்களே, இனி நான் என்ன செய்யப்போகிறேன் என கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நடிகரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அந்த வீடியோவை பகிர்ந்து இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.