தமிழகம்

40 நாள்தான் ஆச்சு.. தாலி குங்குமத்தை இழந்து தவிக்கும் புதுப்பெண்.. மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பலியான சோகம்..

Summary:

திருமணம் முடிந்த 40 நாட்கள் புது மாப்பிளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை

திருமணம் முடிந்த 40 நாட்கள் புது மாப்பிளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளர் நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சிவகாசி(32). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சிவகாசி சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் சிவகாசிக்கும் சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வம் மகள் மீனா என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து தங்கள் புது வாழ்க்கையை தொடங்கிய கணவன் மனைவி, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் நாள் அன்று வாக்களிப்பதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். மனைவி வாக்களித்ததும் மனைவியை அவரது தந்தை வீட்டில் விட்டுவிட்டு சிவகாசி தனியாக எடப்பாடிக்கு திரும்பியுள்ளார்.

பின்னர் எட்டப்பாடியில் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு இருசக்கர வாகனம் மூலம் அங்கிருந்து தனது உறவினர் வீட்டிற்கு சென்ற சிவகாசி அங்கிருந்து மீண்டும் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது வெள்ளர்நாயக்கன்பாளையம் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள வளைவு ஒன்றில் வாகனத்தை திருப்பிய சிவகாசி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் சிவகாசிக்கு தலையில் பலத்த அடிபட்டு, சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருமணம் முடிந்து 40 நாட்களில் புது மாப்பிளை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement