கொரோனோ சந்தேகத்தில் ஒதுக்கிய கிராமத்தினர்! வாலிபர் எடுத்த விபரீத முடிவு!man-commits-suicide-in-himachala-pradesh

ஹிமாச்சல பிரதேசம் உணா மாவட்டத்தில் பங்கர் கிராமத்தில் வசித்து வந்தவர் முகமது தில்ஷாத். 37 வயது நிறைந்த இவருக்கு சமீபகாலமாக இருமல் மற்றும் சளி இருந்துவந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு கொரோனாவாக இருக்கலாம் என சந்தேகப்பட்ட நிலையில், சோதனை மேற்கொள்ள தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் முகமது தில்ஷாத்த்தை  சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது கிராமத்தில் விட்டுச் சென்றனர். ஆனால் மறுநாளே அவர் தனது வீட்டில் செய்து கொண்டார்.

suicide

இது தொடர்பாக டிஜிபி சீதாராம் மார்டி கூறியதாவது,  முகமது தில்ஷாத்தை கொரோனா நோயாளி என அவரது கிராம மக்கள் சந்தேகப்பட்டுள்ளனர். மேலும் அவருக்கு நோய் இல்லை என உறுதி செய்யப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகும்  அவரை ஒதுக்கி வைத்து பாகுபாடு காட்டியுள்ளனர்.  இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார் என கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.