தீராத கடன் தொல்லையால் 28 வயது கூலித்தொழிலாளி விபரீத முடிவு!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த 28 வயதுடைய கூலி தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை கிஷாந்த் தெருவில் வசித்து வருபவர் 28 வயதுடைய அஸ்வந்த் என்பவர். இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே கடன் தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வந்த அஸ்வந்த் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதனால் சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.