மெட்ரோ ரயிலில் ஆபாசமாக வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்த இளம் பெண்கள்!

மெட்ரோ ரயிலில் ஆபாசமாக வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்த இளம் பெண்கள்!


Man caught while taking video of girls

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 45 வயது நபர் ஒருவர் தங்களை ஆபாசமாக வீடியோ எடுப்பதை பார்த்த பெண்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஐந்து இளம் பெண்கள் சென்னை கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் வரை செல்ல மெட்ரோ ரயிலில் ஏறி உள்ளனர். அவர்கள் ஏறிய அதே ரயிலில் 45 வயது நபர் அண்ணா நகரிலிருந்து அதே ரயிலில் பயணம் செய்துள்ளார்.

இளம்பெண்களின் எதிரில் அமர்ந்திருந்த அந்த நபர் தன்னுடைய மொபைல் போனை கையிலேயே வைத்துள்ளார். அவருடைய பாவனைகள் அந்தப் பெண்களுக்கு சந்தேகத்தை அளித்தது. அவர் அந்தப் பெண்களை வீடியோ எடுப்பது போல் அவர்கள் உணர்ந்துள்ளனர். இதனை ஒரு பெண், மெட்ரோ ரயிலின் கண்ணாடியில் தெரிந்த அந்த நபரின் மொபைல் டிஸ்ப்ளே மூலம் உறுதி செய்தார். 

metro train

இதுகுறித்து அந்த நபரிடம் இளம் பெண்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் நீங்கள் அநாகரிகமாக மற்றும் சிறிய அளவிலான உடை அணிந்தாலும் தான் படமெடுத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கண்ட்ரோல் ரூமில் அந்தப் பெண்கள் அந்த நபர் குறித்து புகார் அளித்தனர்.

பின்னர் அதிகாரிகள் அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில்  மொபைல் மூலம் அந்தப் பெண்களை வீடியோ மற்றும் படம் எடுத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த நபர் அண்ணா நகரைச் சேர்ந்த தினேஷ் என்பதும் தெரியவந்தது. பின்னர் அதிகாரிகள் வடபழனி காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்தனர்.