தமிழகம் லைப் ஸ்டைல்

அட பாவமே!! இப்படியும் நடக்குமா!! சானிடைசர் தடவிய கையில் சிகரெட்… உடல் முழுவதும் தீப்பற்றிய பரிதாபம்!

Summary:

சானிடைசர் தடவிய கைகளுடன் சிகரெட் பிடித்த நபர் உடல் முழுவதும் தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏ

சானிடைசர் தடவிய கைகளுடன் சிகரெட் பிடித்த நபர் உடல் முழுவதும் தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து தப்பிக்க அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது சானிடைசர். சானிடைசர் பயன்படுத்துவது பலவிதங்களில் நல்லது என்றாலும், அவற்றை பயன்படுத்தும் முறை, பாதுகாப்பு முறைகள் குறித்தும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக சானிடைசர் பயன்படுத்திய உடன் தீப்பிடிக்கும் பொருட்களின் அருகில் செல்வதோ, பயன்படுத்துவது தவறு என்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில் சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த ரூபன்(50) என்ற நபர் தனது வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், வீட்டில் இருந்த சானிடைசரை எடுத்து பயன்படுத்தியுள்ளார்.

அப்போது சிறிதளவு சானிடைசர் ரூபனின் சட்டையில் பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் சிகரெட் மற்றும் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு கழிவறைக்குள் சென்ற ரூபன், அங்கு சிகரெட்டை பற்றவைத்துள்ளார். உடனே அதில் இருந்து வெளியேறிய தீ, ரூபனின் கைகள் மற்றும் சட்டையில் இருந்த சானிடைசர் மீது பட்டு குப்பென உடல் முழுவதும் ஏறிய தொடங்கியுள்ளது.

இதனால் சத்தம் போட்டு அலறிய ரூபனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் முகம் மற்றும் உடலில் தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement