தமிழகம்

இரண்டு மனைவியும் கூட இல்ல.. மூன்று நேர சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு இளைஞர் செய்த காரியம்

Summary:

ஜெயிலில் மூன்று நேரம் சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெயிலில் மூன்று நேரம் சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷ் குமார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்தநிலையில் இரண்டு மனைவிகளும் இவரை விட்டு பிரிந்து சென்றதால் சந்தோஷ் குமார் தனியாக இருந்துள்ளார். இதனால் அவருக்கு சாப்பாட்டிற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜெயிலுக்கு சென்றால் மூன்று நேரமும் சாப்பாடு கிடைக்கும் என எண்ணிய சந்தோஷ் குமார் நேற்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, ஈரோடு மணிக்கூண்டு, ரயில் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், குண்டு வெடிக்கப்போவதாகவும் கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனை அடுத்து உஷாரான போலீசார் மேற்கொண்ட இடங்களில் சோதனை நடத்தியதில் அது வெறும் புரளி என்பதை கண்டுபிடித்தனர். மேலும், காவல் கட்டுப்பட்டு அறைக்கு போன் செய்த நபரை கண்டுபிடித்து அவரிடம் விசாரித்ததில் அவர் மூன்று நேரம் சாப்பாட்டிற்கு ஆசைப்பட்டு இதுபோன்று செய்ததாக கூறியுள்ளார்.

ஏற்கனவே சாப்பாட்டிற்கு ஆசைப்பட்டு ரயில் நிலையத்திற்கு குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த வழக்கு சந்தோஷ் குமார் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement