10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்.! தட்டி தூக்கிய போலீஸ்.!


man-abused-young-girl

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பனம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. 26 வயது நிரம்பிய இவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் பேரதிர்ச்சியடைந்தனர் .

இதுகுறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.