தமிழகம் லைப் ஸ்டைல்

டிக் டாக்கில் இளம் பெண்களை மயக்கி உல்லாசம்..! பல பெண்களுடன் இன்பம் அனுபவித்த இளைஞர்..! பண்ருட்டியில் நடந்த பகீர் தகவல்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்து வருபவர் ராஜசேகர். இவருக்கும் சுகன்யா என்ற பெண்ணிற்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் டிக் டாக் வீடியோ பதிவிட்டு வரும் ராஜசேகர், டிக் டாக்கில் வளம் வரும் இளம் பெண்களை மயக்குவதில் கில்லாடி என கூறப்படுகிறது. பல அழகான பெண்களிடம் பேசி, ஆசை வார்த்தை கூறி அவர்களை மயக்கியுள்ளார் ராஜசேகர்.

மேலும், தான் சினிமா துறையை சார்ந்தவன் எனக்கு பல நடிகர்களுடன் தொடர்பு உள்ளது என்று கூறி பல பெண்களிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அறந்தாங்கியில் உள்ள ஜவுளி கடையில் வேலைசெய்து வந்த கவிநயா என்ரை பெண்ணை டிக் டாக்கில் மயக்கி திருமணம் செய்துகொண்டார் ராஜசேகர்.

இதுகுறித்து ராஜசேகரின் மனைவி ண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். டிக் டாக் செயலியை தடை செய்யுமாறும், தன் கணவனை மீட்டு தருமாறு சுகன்யா அந்த புகாரில் கூறியுள்ளார்.


Advertisement