கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
கலைஞர் மகளிர் உரிமை தொகை : அடுத்தக்கட்ட பணி வருகின்ற 6 தேதி தொடக்கம்!!
பெண்களுக்கான, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் அளித்த பெண்களின் விவரங்கள் சரி பார்க்கும் வேலை வருகின்ற 6ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
கடந்த 20 ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று இந்த படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்றது. இதன் முதல் கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 1ம் தேதி முதல் படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்ற வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை 75 லட்சம் விண்ணப்பங்கள் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தொடர்ந்து 25 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட இருக்கிறது.
பின்னர் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 6 தேதி முதல் சரி பார்க்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.