ஓடஓட விரட்டி கொடூர கொலை.. மதுரையில் பயங்கரம்.. கொலை வழக்கால் நடந்த சோகம்.!
குற்றவழக்கில் சிறைக்குச் சென்று திரும்பிய இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை குற்றவாளி:
மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி, கண்ணன் காலனி பகுதியில் வசித்து வருபவர் முருகன் (வயது 31). இவர் கடந்த 2018 ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளி ஆவார். இதுதொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: யூடியூபர் சவுக்கு சங்கர் மகன் தியோ ஆழிசை தற்கொலை.. கண்ணீரில் குடும்பத்தினர்..! 13 வயதில் நடந்த சோகம்.!
ஆஜரானார்..
இதனிடையே, வழக்கு விசாரணைக்காக நேற்று காலை நேரத்தில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்ற விசாரணைக்குப்பின் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம், அவரை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் பின்தொடர்ந்து.
கொடூரம்:
முதலில் நடந்த கொலை முயற்சியின்போது இடம் அமையாத நிலையில், முருகனின் வீட்டுக்கு அருகில் வந்ததும் அரிவாள் உட்பட பயங்கர ஆயுதத்தால் விரட்டி விரட்டி கொலை செய்தது. உயிருக்கு பயந்து ஓடியவரை ஓடஓட விரட்டி கொலை நடந்தது.
மரணம்:
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். முருகனின் இறப்பை உறுதிசெய்த பின்னர் கும்பல் தப்பிச்சென்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 16 வயது மாணவி கர்ப்பம்.. கீழே விழுந்ததில் இறந்த சிசு.. சிக்கலில் காதலன்.! விருதுநகரில் பகீர்.!