தமிழகம்

தொடரும் மெட்ராஸ் IIT மர்மம்! மேலும் ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை!

Summary:

Madras IIT student suicide in hostel room

சென்னையில் உள்ள IIT கல்லூரி பெண்கள் விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் IIT வளாகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது பெற்றோர்களை அச்சமடைய வைத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த சாகுல் என்ற 23 வயது மாணவர் கல்லூரி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டார், மேலும் 2016 ஆம் ஆண்டு, கல்லூரி ஆராய்ச்சி மாணவி ஒருவர், ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதே நாளில் கல்லூரி வளாகத்தில் வசித்து வந்த பேராசிரியர் மனைவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சனா குமாரி என்ற 25 வயது மதிக்கத்தக்க ஆராய்ச்சி படிப்பு பயின்றுவரும் மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவரது பெற்றோர் கடந்த இரண்டு நாட்களாக அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியாததை அடுத்து கல்லூரி விடுதிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் காவல் துறையினர் சென்று பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே பார்க்கையில் மாணவி தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement