AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
இன்றும், நாளையும் விளாசப்போகும் கனமழை.. 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!
தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுகுறைந்து சென்னையை விட்டு விலகியது. காலை சென்னைக்கு 40 கி.மீ நெருக்கத்தில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 60 கி.மீ தொலைவுக்கு விலகி சென்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் வட தமிழக - புதுவை கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி அதற்கடுத்த 12 மணிநேரத்தில் மேலும் வலு குறையும்.
கனமழை எச்சரிக்கை:
இதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மக்களே உஷார்.!

நாளைய வானிலை (Tomorrow Weather):
இன்று மற்றும் நாளை தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். நாளைய வானிலையை பொறுத்தமட்டில் ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திண்டுக்கல், தேனி, திருப்பூர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை (Chennai Weather):
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி - மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தரைக்காற்று வீசும் என்பதால் மக்கள் கடலோரப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கமாறும், ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையை புரட்டிப்போடும் மிக கனமழை.. அடுத்த 24 மணிநேரத்திற்கு உஷார்.. இன்றைய வானிலை நிலவரம்.!