AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
சென்னையை புரட்டிப்போடும் மிக கனமழை.. அடுத்த 24 மணிநேரத்திற்கு உஷார்.. இன்றைய வானிலை நிலவரம்.!
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்கும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடி சென்னையை நோக்கி பயணித்து வருகிறது. இந்த புயல் இலங்கையை கடந்த பின் வங்கக்கடல் வழியே நகர்ந்து பின் கடலுக்குள்ளேயே புயலின் முந்தைய நிலையை அடைந்து வலுவிழந்தது.
எங்கெல்லாம் மிக கனமழை எச்சரிக்கை?
இது அடுத்த 12 மணி நேரத்திற்கு பின் மேலும் வலுக்குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்திற்கு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோல சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மக்களே உஷார்.!
நாளைய வானிலை நிலவரம்:
நாளைய வானிலையை பொறுத்தவரையில் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மக்கள் கடலோர பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும், மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் விளாசப்போகும் மழை.. இன்று எங்கெல்லாம் விடுமுறை?.!