அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் விளாசப்போகும் மழை.. இன்று எங்கெல்லாம் விடுமுறை?.!



Moderate to Heavy Rain in Tamil Nadu Puducherry & Karaikal Declare School Holiday

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. டிட்வா புயல் கரையை கடந்த பின்னும் வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் அணைகடங்களிலும் காலை முதல் லேசான மழை தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. 

காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு:

இந்த நிலையில் தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதையும் படிங்க: இரவில் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுக்கப்போகும் கனமழை! இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்....

Rain alert

நாகப்பட்டினத்தில் உள்ளூர் விடுமுறை:

டிட்வா புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதுபோல நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் தர்காவில் நடைபெறும் கந்தூரி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மொன்தா புயல் எதிரொலியால் கனமழை எச்சரிக்கை! இந்த 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? வெளியாகும் குட் நியூஸ்...