தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மக்களே உஷார்.!



Rain Alert For Next 6 Days Heavy Rain Alert For 13 Districts Today

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய சக்தி புயல் நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது மேலும் தென்கிழக்கே மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்றைய வானிலை நிலவரம் :

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தேனி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சேலம், திருச்சி மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

நாளைய வானிலை நிலவரம் :

நாளைய வானிலை நிலவரத்தை பொறுத்தவரையில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வானிலை

சென்னை வானிலை நிலவரம் :

அக்டோபர் 9-ஆம் தேதியை பொறுத்தவரையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, நீலகிரி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்கள் எச்சரிக்கை :

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக மத்திய மேற்கு - வட மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்! வானிலை மையம் அறிவிப்பு!