செய்தியாளர் சந்திப்பில் ரொனால்டோவின் கோக்குமாக்கான செயல்.! கோகோ கோலா நிறுவனத்திற்கு ரூ.29,337 கோடி இழப்பு.!

செய்தியாளர் சந்திப்பில் ரொனால்டோவின் கோக்குமாக்கான செயல்.! கோகோ கோலா நிறுவனத்திற்கு ரூ.29,337 கோடி இழப்பு.!



loss-coca-cola-for-ronaldo

உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக விளங்குபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் உலகம் முழுவதும் தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் வைத்துள்ளார். இந்த நிலையில் யூரோ கால்பந்தாட்டத் தொடரில் நேற்று ஹங்கேரி அணியும், போர்ச்சுகல் அணியும் மோதின. இதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ பங்கேற்றார்.

அப்போது அவர், அங்கு எதிரே இருந்த டேபிளில் வைக்கப்பட்டிருந்த 2 கோகோ கோலா பாட்டில்களை நகர்த்தி வைத்துவிட்டு, தனது முன்னால் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து என்னிடம் தண்ணீர் உள்ளது என்று காட்டினார். இதனால் கோகோ கோலா நிறுவனத்துக்கு 4 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொனால்டோ செய்த செயலால் கோகோ கோலா நிறுவனத்தின் பங்குகள் சரிந்து, இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோகோ - கோலா குளிர்பானத்துக்கு எதிராக ரொனால்டோவின் இந்தச் செயலை சமூக வலைதளங்களில் பலரும் வரவேற்றுள்ளனர். ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடருக்கான ஸ்பான்சர்களுள் ஒன்றான கோகோ கோலா, கிறிஸ்டியனோ ரோனால்டோவின் செயலுக்காக இதுவரை சட்ட ரீதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.