சொத்துப்பிரச்சனையில் துள்ளத்துடிக்க நடந்த படுகொலை.. பதறவைக்கும் சம்பவத்தின் பரபரப்பு பின்னணி..!!

சொத்துப்பிரச்சனையில் துள்ளத்துடிக்க நடந்த படுகொலை.. பதறவைக்கும் சம்பவத்தின் பரபரப்பு பின்னணி..!!


lorry driver killed by 2 mens

லாரி டிரைவரை சொத்து பிரச்சனை காரணமாக படுகொலை செய்த இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே கெங்கவல்லி கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவர் ஒரு லாரி டிரைவர். இவரது அத்தை பங்காரு (வயது 66). இவர்களுக்கு இடையில் 2 ஏக்கர் நிலம் தொடர்பாக முன்பே சொத்து பிரச்சனை இருந்துவந்தது. 

Salem

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக லாரி டிரைவர் சீனிவாசனை பங்காருவின் பேரன்களும், ரவிச்சந்திரன் என்பவரின் மகன்களுமான மணிகண்டன் (வயது 31), விஜி (வயது 28) இருவரும் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆத்தூர் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குபதிந்து தலைமறைவாகி இருந்த அவர்களை தேடி வந்தார். 

இந்த நிலையில் நேற்று சகோதரர்களான விஜி மற்றும் மணிகண்டன் இருவரும் ஆத்தூர் ஜே.எம் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.