தமிழகம்

12 வாகனங்கள் மீது தாறுமாறாக மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்திய லாரி.! பதறவைக்கும் வீடியோ.!

Summary:

தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் லாரி ஒன்று 12 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் 4 பேர் பலியாகினர்.


தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கண்வாய் சரிவுப்பாதையில் இருசக்கர வாகனம் மற்றும் மினிலாரி மோதி சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன. அப்போது சிமெண்ட் மூட்டைகளுடன் வேகமாக வந்த கனரக லாரி ஒன்று அடுத்தடுத்து 12 கார்கள் மீது மோதியது.

அங்கு ஏற்பட்ட பெரும் விபத்திற்கு பிறகு காரில் அடிபட்டவர்கள் அலறல் சத்தம் போட்டுள்ளனர். சுமார் 5 கார்கள் நொருங்கி பெரியளவில் சேதமாயின. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்திl  3 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு 4ஆக அதிகரித்தது.

இந்தநிலையில், இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement