தமிழகம்

தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை!

Summary:

local holyday for thanjai periya kovil Reform


தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது தஞ்சைப் பெரிய கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சோழ நாடு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும்.

இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற மன்னர் முதலாம் அருள்மொழி சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.

1010 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற கோவில் தான் தஞ்சைப் பெரிய கோயில். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்துகொண்டே இருப்பார்கள்.

இந்த கோவிலில் கடந்த 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் 23 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி(புதன்கிழமை) மீண்டும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனைத்தொடர்ந்து கோவிலில் தொல்லியல்துறை, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதையடுத்து பிப்ரவரி 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 22 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 


Advertisement