தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! கடனுதவி திட்டத்தை துவங்கிவைக்கிறார் மு.க.ஸ்டாலின்.!
மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கிவைக்கிறார்.
இந்தியாவில் முதன்முறையாக 1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தர்மபுரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை பல லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்த குழுக்களில் கோடிக்கணக்கான மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மகளிர் சுயஉதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல கோடி மதிப்பில் பண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு மேலும் ரூ.3000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடக்கும் விழாவில் மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு முதல்வர் கடனுதவி வழங்க உள்ளார்.