தமிழகத்தில் நூலகங்கள் எப்போது திறக்கப்படுகிறது.? தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் நூலகங்கள் எப்போது திறக்கப்படுகிறது.? தமிழக அரசு அறிவிப்பு!



Libraries will open september in Tamil Nadu

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரும் கொரோனா பரவல் விடாது அதிகரித்து வந்தது. இந்தநிலையில் சில தளர்வுகளுடன் பல கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையறையின்றி விடுப்பு அறிவிக்கப்பட்டது. தற்போது வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

Libraries

இந்தநிலையில், செப்டம்பர் 1ம் தேதி முதல் மாணவ மாணவிகளின் நலன் கருதி முதலமைச்சர் உத்திரவின் பேரில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு நூலகங்களும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு பொது நூலகங்களுக்கு வர அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நூலகங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளது.